ஃபாஸ்டேக் முறைக்கான அவகாசம் நீட்டிப்பு- ஆனால் அதற்குள் சாத்தித்த மத்திய அரசு..!

வரும் டிசம்பர் 1 முதல் சுங்கச்சாவடிகளில் கட்டாய ஃபாஸ்டேக் கட்டண முறை அமல்படுத்தப்படும் என்கிற உத்தரவை தளர்த்தியுள்ளது மத்திய அரசு.


சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் செல்வதற்கு காலதாமதம் ஏற்படுவதால், நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் ணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிப்பதன் அடிப்படையில் ஃபாஸ்டேக் முறையை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு.


இதை அனைத்து வாகன ஓட்டிகளும் பயன்படுத்தும் விதமாக வரும் டிசம்பர் 1ம் தேதி முதல், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஃபாஸ்ட்டேக் முறை கட்டாயமாக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

மேலும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் குறிப்பிட்ட வாகனச்சாவடிகளில் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஃபாஸ்டேக்குகளை இலவசமாக விநியோகித்து வருகிறது. தவிர ஃபாஸ்டேக்கில் பணம் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து வாகன உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த டிசம்பர் 28ம் தேதி வரை நாடு முழுவதும் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாஸ்டேகுகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 26ம் தேதி 1,35,583 ஃபாஸ்டேகுகள் மட்டுமே விநியோகிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஒரேநாளில், இவ்வளவு அதிகமான ஃபாஸ்டேகுகள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.