இந்திய வாகனச் சந்தையில் இருந்து சஃபாரி ஸ்டார்ம் எஸ்யூவி காரை விலக்கிக் கொள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் பிரபல மாடலாக திகழும் சஃபாரி ஸ்டார்ம் எஸ்யூவி காரை டாடா மோட்டார்ஸ் கைவிட முடிவு செய்துள்ள நிலையில், விரைவில் அந்த மாடல் சந்தையில் இருந்து விலக்கிக் கொள்ளப்படவுள்ளது.
விரைவில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நிறுவனத்தின் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளன. இந்த காருக்கு பெரியளவில் விற்பனையாகாத நிலையில், இந்த காரை டீலர்ஷிப் நிறுவனங்கள் புக்கிங் செய்வதை நிறுத்திக் கொண்டுவிட்டன.
இதனால் பல எண்ணிக்கையிலான டாடா சஃபாரி ஸ்டார்ம் கார்கள் கிடங்குகளில் தேக்கமடைந்துள்ளன. குறிப்பிட்ட டீலர்கள் இந்த காருக்கான டெஸ்ட் ட்ரைவ் நடவடிக்கைகளையும் நிறுத்திக் கொண்டுவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.