கல்லீனன் மாடலுக்கு முன்பாக, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்கு நல்ல விற்பனை திறனை அளிக்கும் மாடலாக பாந்தம் கார் இருந்தது.
அதில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிக இடவசதி, நல்ல ஆடம்பரான அம்சங்கள், பழமையும் புதுமையும் சேர்ந்த கட்டமைப்பு மற்றும் ரோல்ஸ் ராய்ஸின் முதல் எஸ்யூவி கார் போன்ற சிறப்பம்சங்கள் கல்லீனன் காருக்கு சாதகமாகவுள்ளன. இதனாலேயே சந்தையில் பல ஆண்டுகளாக வலு பெற்றிருந்த பாந்தம் காரை எளிதாக பின்னுக்கு தள்ளியது கல்லீனன். மேலும், இந்த காரை சொந்தமாக வாங்குவதற்காக உலகளவில் பல்வேறு செல்வந்தர்கள் போட்டி போட்டுக் கொண்டுள்ளனர். இதனால் காரை உற்பத்தி செய்து டெலிவிரி தருவதற்கான காத்திருப்பு காலம் தொடர்ந்து நீண்டுக் கொண்டே செல்கிறது.