இதுதொடர்பாக பேசிய ரோல்ஸ் ராய்ஸ் தலைமைச் செயல் அதிகாரி டார்ஸ்டன் முல்லர்-அட்வாஸ், கடந்தாண்டு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளத்து மகிழ்ச்சி அளிக்கிறது.
இதை எங்கள் நிறுவனம் உலகம் முழுவதும் கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ள வாக்குறுதியை காப்பாற்றிட ரோஸ்ல் ராய்ஸ் நிறுவனம் இன்னும் விழிப்புடன் செயல்படும்.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இத்தகைய விற்பனை வளர்ச்சியை அடைந்ததற்கு முக்கிய காரணம் கல்லீனன் மாடல் தான். விற்பனைக்கு வந்து ஒரு வருடத்தை கடந்துவிட்டாலும், தொடர்ந்து இந்த காருக்கு உலகளவில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. வரும் ஆண்டுகளில் கல்லீனன் காரினுடைய வரவேற்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோல்ஸ் ராய்ஸ் மீதான வாடிக்கையாளர்களின் நம்பிக்கை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்று அவர் பேசினார்.