நன்றி கூறும் ரோல்ஸ் ராய்ஸ்

ரோல்ஸ் ராய்ஸ் கல்லீனன் எஸ்யூவி காரில் 6.75 லிட்டர் வி12 பெட்ரோல் எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இது 563 பிஎச்பி பவர் மற்றும் 850 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும். இந்நிறுவனம் தயாரிக்கும் கார்களுக்கான சந்தை மதிப்பு உயர்ந்திருந்தாலும், அதை அனைவராலும் அவ்வளவு எளிதில் வாங்கிட முடியாது.


ரோல்ஸ் ராய்ஸ் கார்களை சொந்தமாக வாங்குவதற்கு என்று சில வழிமுறைகள் உள்ளன. நாம் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை சொந்தமாக வாங்க முடிவு செய்தாலும், அந்நிறுவனம் தான் வாடிக்கையாளரை தேர்வு செய்யும். இந்த காரை வாங்க பெரும் பணக்காரர்களே தவம் கிடக்கின்றனர். அவர்களில் பலருடைய விண்ணப்பங்களை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் நிராகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் கார்களை வாங்குவதற்கு சமூகத்தில் நல்ல அந்தஸ்த்தை பெற்றிருக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது.