" alt="" aria-hidden="true" />
பாளையங்கோட்டை பிரபலஸ்வீட்ஸ் கடையில் வருமான வரி துறையினர் அதிரடி சோதனை
பாளையங்கோட்டையிலுள்ள ஸ்வீட்ஸ் கடையில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
அண்மையில் தென் மாவட்டங்களிலுள்ள முக்கிய நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
சென்ற முறை கூட பிரபல நட்சத்திர உணவகம் மற்றும் அதன் கிளை நிறுவனங்களில் வருமான வரியினர் அதிரடி சோதனை செய்தனர் அதில் பல முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது அந்த வகையில் இன்று நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள பிரபல சுவிட்ஸ் கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது. அந்நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு கடை , வீடு மற்றும் குடோன் என நான்கு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.